புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (09:54 IST)

பல பெண்களுடன் ஆபாச அரட்டை… மனைவி அரங்கேற்றிய நாடகத்தில் சிக்கிய கணவர்!

தஞ்சாவூரைச் சேர்ந்த அருண் ஜோஷி என்ற வாலிபர் வெளிநாட்டில் இருந்து கொண்டே தமிழகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவர் மனைவி கண்டுபிடித்து போலிஸில் சிக்கவைத்துள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அருண் ஜோஷிக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அருண் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எதேச்சையாக அவரின் கணினியை பயன்படுத்தும்போது அவரின் மனைவி அருண் பல பெண்களுடன் ஆபாச அரட்டை மற்றும் ஆபாசப் புகைப்படங்களையும் அனுப்பியிருப்பது தெரிந்துள்ளது.

இதையடுத்து கணவன் மேல் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலியான ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதன் மூலம் கணவருக்கு நட்பழைப்பு அனுப்பியுள்ளார். அந்த நட்பழைப்பை ஏற்ற அருண் வழக்கம் போல ஆபாச அரட்டைகளை ஆரம்பித்துள்ளார். அவரை வசமாக மாட்ட வைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட பெண் தான் தொழிலதிபரின் மகள் எனவும் அருணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி அவரை இந்தியாவுக்கு வரவழைக்க டிக்கெட் போட்டுள்ளார்.

அதை நம்பி அருணும் சென்னை வந்து அவர் சொன்ன ஹோட்டலுக்கு செல்ல அங்கு இருந்த போலிஸார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கைப்பற்ற பட்ட மொபைல் போன்களில் இருந்து ஏராளமான ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.