1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (19:32 IST)

சென்னை வழியாக திருப்பதி சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்: தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

சென்னை வழியாக திருப்பதி சென்ற பெண் ஒருவருக்கு ஒமிகிரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். 
 
கென்யாவில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் அதன்பின் தனது சொந்த ஊரான திருப்பதி சென்று உள்ளார். அவருக்கு திருப்பதியில் ஒமிகிரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது 
இதனை அடுத்து அவரது குடும்பத்தினரைம் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கென்யாவில் இருந்து வந்த பெண் ஒருவர் சென்னை வழியாக திருப்பதி சென்ற நிலையில் அவருக்கு ஒமிகிரான் பாதிப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.