செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (17:50 IST)

கருவைக் கலைக்க முயன்ற பெண்… கர்ப்பப்பை சீழ்ப்பிடித்து உயிரிழந்த பரிதாபம்!

சென்னையில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கருவைக் கலைக்க நாட்டு மருந்து சாப்பிட்டவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் உள்கா மற்றும் குமாரி கஞ்சக்கா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். நான்கு மாத கர்ப்பமாக இருந்த குமாரி சமீபத்தில் பிரசவத்தின் போது உயிரிழந்த தனது உறவினர் பெண்ணின் இறுதி சடங்குக்கு சென்று வந்துள்ளார்.

தானும் பிரசவத்தின் போது பலியாகிவிடுமோவோ என்ற அச்சத்தில் கணவருக்கு தெரியாமல் கருவைக் கலைக்க நாட்டு மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதிலிருந்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமானதை அடுத்து கணவரிடம் உண்மையை சொல்லியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான கணவர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளார். முதலில் உடல்நிலை தேறிய நிலையில் மீண்டும் உடல்நலம் குன்ற செய்த பரிசோதனைகளில் நாட்டு மருந்தால் உயிரிழந்த சிசு கர்ப்பப்பையிலேயே தங்கி சீழ் பிடித்துவிட்டதாகக் கூறி மருத்துவர்கள் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக கொரட்டூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.