செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (16:52 IST)

இந்தியில் ரீமேக் ஆகும் டிரைவிங் லைசன்ஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ்.

மறைந்த இயக்குனர் சாச்சி திரைக்கதை எழுதி பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் அவரின் தீவிர ரசிகரான டிராபிக் இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தெலுங்கில் இந்தபடத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதே போல இப்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிருத்வி ராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், சுராஜ் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஸ்மியும் நடிக்க உள்ளனர்.