செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (17:11 IST)

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்புரத்தைச் சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய். இவர் எப்போதும் செல்போனில் பிரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டை எப்போதும் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இது சம்மந்தமாகா அவரின் தாயார் கண்டித்து படிக்க சொல்லியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் சஞ்சய் வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த போலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.