1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai velacheri massage centre robbery

மஸாஜ் செண்டருக்கு பட்டாக்கத்தியுடன் வந்த கும்பல்! அதிர்ச்சியளிக்கும் கொள்ளை சம்பவம்!

சென்னை
சென்னை வேளச்சேரியில் உள்ள மஸாஜ் செண்டருக்கு பட்டாக்கத்தியுடன் வந்த கும்பல் உரிமையாளரைத் தாக்கி தப்பிச் சென்றுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள 100 அடிசாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா என்ற பெயரில் மஸாஜ் செண்டர் உள்ளது. இந்த கடைக்குள் பட்டாக்கத்தியுடன் நுழைந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அவர்கள் தர மறுத்த நிலையில் கையில் இருந்த அரிவாளால் அவரைத் தாக்கிவிட்டு ஸ்பாவில் இருந்த பெண்களிடம் இருந்து சுமார் 30000 பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதைவைத்து போலிஸார் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிவருகிறது.
அடுத்த கட்டுரையில்
விருது வாங்கிய கையோடு பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்!