பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடர் சமீபகாலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் கடந்த ஆண்டு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அந்த தொடரின் நாயகி கண்ணம்மா தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதால் அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வது போல ஒரு சீக்வன்ஸ் இடம்பெற்றிருந்தது. அதில் கண்ணம்மா நடந்து செல்வது போன்ற காட்சிகள் ஒரு வாரத்துக்கும் மேல் ஒளிபரப்பப் படுவதால் மீம்ஸ்கள் பகிரப்பட்டன.
ஆனால் என்னதான் ட்ரோல்கள் இருந்தாலும் அந்த சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தது. மேலும் அந்த தொடரின் நாயகி ரோஷினிக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உருவானார்கள். ஆனால் இப்போது அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்குப் பதில் நக்ஷத்திரா அந்தவேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.