புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:58 IST)

சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை அதாவது ஜனவரி 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகளை https://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பது அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.