1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:05 IST)

திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தாலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனவரி 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 முதல் 12 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தது.

ஆனால், 10 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.