செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (19:44 IST)

வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தேவைப்பட்டால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது என்பதும் சென்னை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு வந்து தடுப்பூசி போடும் திட்டம் சென்னையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு 60 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.