திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (07:10 IST)

இன்று முதல் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன: பயணிகள் மகிழ்ச்சி!

இன்று முதல் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பேருந்து இரயில்களில் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஓரளவு தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் ஓடியது
 
இந்த நிலையில் இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் விடப்படும் என்றும் அதே போல் ரயில்களும் ஓடத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 8 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்குப் பின்னர் இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருப்பதாகவும் காலை 8 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் அவர்கள் மெட்ரோ ரயில் இயங்கும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து பயணத்தை தொடங்கி வைக்கிறார் 
 
அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று காலை 6:10 மணிக்கு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்காக மட்டுமே ரயில்கள் இயங்கும் என்றும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் முன்பதிவு செய்யப்பட்டு பயண டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.