திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (19:44 IST)

செப்.7 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு

கொரோனோ வைரஸ் பாதிப்பு தினந்தோறும் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் இயல்பு நிலை திரும்பும் வகையில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே
 
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் இயங்கத் தொடங்கியதை அடுத்து செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன 
 
இந்த நிலையில் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் புறநகர் ரயில் சேவையும் தொடங்க இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியானது. இந்த செய்திகள் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வெளியான நிலையில் இந்த தகவலை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது 
 
செப்டம்பர் 7 முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் புறநகர் ரயில் சேவை இயக்கம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தெற்கு ரயில்வே வெளியிடவில்லை என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து செப்டம்பர் 7 முதல் புறநகர் ரயில்சேவை இயங்கும் என்று வெளியான தகவல் வதந்தி என்பது உறுதி ஆகியுள்ளது