1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (08:03 IST)

பொது முடக்கம் இல்லாத முதல் ஞாயிறு: இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொது முடக்கம் இல்லாத முதல் ஞாயிறு என்பதால் இன்று காலை முதலே இறைச்சிகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஞாயிறும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இதனை அடுத்து சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அறிவிப்பின்படி இனிமேல் ஞாயிறு அன்று போது முடக்கம் இல்லை என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று பொது முடக்கம் இல்லை என்பதால் நீண்ட இடைவேளைக்குப் பின் இன்று பொது முடக்கம் இல்லாத ஞாயிறாக உள்ளது. இதனை அடுத்து இன்று காலை முதலே பொதுமக்கள் மட்டன் சிக்கன் மற்றும் மீன்கள் வாங்க இறைச்சி கடைகளில் குவிந்தனர். 
 
குறிப்பாக சென்னை காசிமேடு பகுதியில் மீன்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொது முடக்கம் இல்லை என்றாலும் பொதுமக்கள் இன்னும் கொரோனா அபாயத்திலிருந்து நீங்கவில்லை என்றும் எனவே மாஸ்க் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
ஆனால் சுகாதாரத் துறையின் அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டு மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சிகள் வாங்க குவிந்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது