1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:31 IST)

மெட்ரோ பணிகள் எதிரொலி: சென்னையின் முக்கிய பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை அடையார்,  இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும், இன்று முதல் ஒருவார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் - இந்திரா நகர் பகுதியில் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
1. MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, 21 ஆவது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக செல்லலாம்
 
2. கலாக்ஷேத்ராவிலிருந்து OMR நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். KBN-லிருந்து OMR நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.
 
3. OMR-லிருந்து 2 ஆவது அவென்யூ வழியாக LB சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வழியாக சென்ற வாகனங்கள் இனி 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும்
 
4. அதேபோல் கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக செல்ல வேண்டும்
 
5.OMR மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து KBN சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். 
 
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Siva