திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:18 IST)

இன்று ஒருநாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு.. என்ன காரணம்?

புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக இன்று ஒருநாள் மட்டும் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
 
இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்  இயக்கப்படுகிறது என்றும், வழக்கமாக நண்பகல் 12 மணி முதல் இரவு  8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை  மெட்ரோ ரயில் இயங்கும் என்றும்  சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
 
பராமரிப்பு காரணமாக தாம்பரம் வழித்தடத்தில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  
கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து என்றும், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை 6 நாட்களுக்கு மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva