வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (15:05 IST)

பஞ்சு மிட்டாயால் ஆபத்து..! குழந்தைகளுக்கு தராதீங்க! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

Cotton Candy
சென்னை கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்துள்ளதால் பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதை தவிர்க்குமாறு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.



பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் உடலில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ”ரோடமைன் பி” என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் காரணமாக புதுச்சேரி பகுதியில் பஞ்சு மிட்டாய் விற்பனையகங்கள், தெருவில் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கி சோதனை செய்ததின் அடிப்படையில் அங்கு பஞ்சு மிட்டாய் தடை செய்யப்பட்டது,.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.



அதை தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் மக்கள் யாரும் பஞ்சு மிட்டாய்களை வாங்கி சாப்பிட வேண்டாம், குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அபாயமான கெமிக்கல் பயன்படுத்தும் பஞ்சுமிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்பு துறை பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகள் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் நஞ்சான ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K