திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (10:02 IST)

சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.. ரயில்வே துறை அறிவிப்பு..!

Train
சென்னை - புதுச்சேரி மற்றும் திருப்பதி ரயில் போக்குவரத்தில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டதாகவும் விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை - புதுச்சேரி முன்பதிவுல்லா ரயில் இன்று விழுப்புரம் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் புதுச்சேரியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - திருப்பதி முன்பதிவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே பகுதியாக  இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரயில் புதுச்சேரியில் இருந்து கிளம்புவதற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பதிக்கு புறப்பட்டு செல்லும். இன்று ஒரு நாள் மட்டும் சென்னை -புதுச்சேரி மற்றும் திருப்பதி ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்து உள்ளதை அடுத்து பயணிகள் அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran