வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (13:29 IST)

சென்னையில் தனியார் மினி பேருந்துகள்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எதிர்ப்பு..!

Mini Bus
தனியார் மினி பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்,
 
அப்போது சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனியார் மினி பேருந்துகளை இயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சென்னையில் தனியார் மினி பேருந்துகளை அனுமதிக்காமல் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வ்டிஉத்தார். 
 
முன்னதாக சென்னையில் மினி பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் மீண்டும் இயக்க பெரும்பாலானோர் ஆதரவு கொடுத்தாலும், அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது தான் பலருடைய கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran