மேகம் கருக்குது... சென்னைவாசிகளே செய்தி உங்களுக்கு தான்...!!
சென்னை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 - 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.