வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (14:09 IST)

இன்று மாலை 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் இன்று மாலை 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலைக்கு மேல் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran