சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (12:42 IST)

சென்னை - திருப்பதி தினசரி விரைவு ரயில் சேவை ரத்து

சென்னை - திருப்பதி இடையிலான தினசரி விரைவு ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏழுமலையான் கோவிலில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் திருப்பதி திருமலை செல்லும் கனமழை பெய்து வருகிறது. அங்கு உள்ள அனுமன் கோவிலில் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருப்பதி-திருமலை இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கும் நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே சென்னை - திருப்பதி இடையிலான தினசரி விரைவு ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் தினசரி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.