திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:53 IST)

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கே? மத்திய அரசு பரிசீலனை

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சென்னை மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அது இறுதி வடிவம் பெற்றுள்ளது 
 
ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து இருந்தது.
 
இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
 
இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்