1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (21:30 IST)

சென்னை அணிக்கு 181 இலக்கு கொடுத்த பஞ்சாப்!

சென்னை அணிக்கு 181 இலக்கு கொடுத்த பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் 11வது போட்டி இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது 
 
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 60 ரன்கள் அடித்தார். ஷிகர் தவான் 33 ரன்கள் அடித்தார்
 
சென்னையை பொருத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் பிரெட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் 
 
இந்த நிலையில் 181 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது