1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin explain about issue with governor

ஆளுனரோடு விரோதம் இல்லை.. இதுதான் காரணம்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Tamilnadu
ஆளுனர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

இந்நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்முடிவு கிண்டி ஆளுனர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. ஆளுனருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலனே முக்கியமானது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” என கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் வேலைக்கு செல்ல இந்தி எதுக்கு கத்துக்கணும்: சத்யராஜ்