செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (11:37 IST)

இருசக்கர வாகனம் மோதி தாய், குழந்தை பலி - சிவகிரி அருகே சோகம்

சிவகிரி அருகே டூவீலர்மீது அரசு பேருந்து நேருக்கு நேராக மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த தாய் மற்றும் அவரின் 3 வயது குழந்தை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
சிவகிரி, ராயகிரி காமராஜர் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளி முருகேசன்,  இவருடைய மனைவி சிவசக்தி(23),  இவருடைய குழந்தைகள் துர்கேஷ் 3,லோகேஷ் ஆகிய நான்கு பேர்களும் சுப்பிரமணிய புரத்தில் உள்ள சிவசக்தியின் தாயின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனார்.
 
அதன்பின் ராயகிரிக்கு திரும்பி கொண்டு இருந்தனர். தென்காசி விருந்து இராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள தெற்கே பட்டக்காடு விலக்கு அருகே வரும் போது,  தென்காசிக்கு செல்லும் அரசு பேருந்து நேருக்கு நேர் திடீரென்று மோதியது 
 
இதில் மோட்டார் சைக்கிள் வந்த 4 பேரும் களும் தூக்கி எரியப்பட்டனர். இதில் படுகாயம் ஏற்பட்டு சிவசக்தி மற்றும் மூன்று வயது மகன் துர்கேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்த தகவல் தெரிந்ததும், இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர், எஸ்ஐ திருமலைச்சாமி ஆகியோர் விரைந்து சென்று முருகேசன் மற்றும் லோகேஷ் ஆகியோரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதோடு, சிவசக்தி, அவரின் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் மதுரை டிஆர்ஒ காலணி கண்ணன் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தாயும், மகனும் பலியான சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்