திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (11:21 IST)

காவல் நிலையத்தில் வாலிபர் அடித்து கொலையா? - பரபரப்பு வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் காவல் நிலையத்தில் உயிரிழந்த மணிகண்டனை காவல்துறை விசாரணைக்கு இழுத்து செல்லும் வீடியோ புட்டேஜ் தற்போது கிடைத்துள்ளது.

 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் மகாதேவன் என்பவர் வீட்டில் 16 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திருடியதாக சந்தேகிக்கப்பட்டு அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் மணிகண்டனை(27) முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 
அதன்பின், காயம்பட்ட மணிகண்டனை முதுகுளத்தூர்  காவல்நிலையத்திலிருந்து பரமக்குடி அரசு மருத்துவனைக்கு  கொண்டுசெல்லும்போதே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டனர் எனக்கூறி ஆத்திரமடைந்த மணிகண்டனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுனர். மேலும், முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில்  மறியலிலும் ஈடுபட்டனர். 
 
இச்சம்பவம் குறித்து ரராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை  சம்பவ இடத்திற்க்கு வந்து மறியல் செய்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மணிகண்டன் இறப்பிற்கு காரணமானவர்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது 
 
இந்நிலையில், வீட்டில் இருக்கும் மணிகண்டனை போலீசார் அடித்து இழுத்து செல்லும் சிசிடிவி வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளது. எனவே இதுதொடர்பாக காவல்நிலையத்தில் மேலதிகாரிகள் விசாரணை  வருகின்றனர். 

அந்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்....


https://www.youtube.com/watch?v=CILDs64JLTk&feature=youtu.be