வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (15:57 IST)

கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்திய கல்லூரி! வேறு இடமே கிடைக்கலையா?

உத்தர பிரதேச மாநிலத்தில் அலிகாரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆண்கள் கழிவறையில் கல்லூரி நிர்வாகம் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளது.

 
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் தரம் சமாஜ் பட்டப்படிப்பு கல்லூரி உள்ளது. அங்கு நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானது. இந்த முறைகேடுகளால் கல்லூரிக்கு கெட்ட பெயர் வராமல் இருக்க முடிவு செய்தது.
 
அதன்படி கல்லூரி ஆண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கல்லூரி கழிப்பறைக்கு செல்லும் மாணவர்கள் அங்கு பிட் அடிக்க தேவையாக பொருட்களை தேர்வு செல்லும் முன் தங்களின் உடம்புகளில் வைத்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
 
இந்த முறைகேட்டை தடுக்க கல்லூரி நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மாணவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கழிப்பறைக்குள் கேமரா வைத்துள்ளதை நியாயப்படுத்த முடியாது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறியதாவது:-
 
தேர்வு நேரத்தின் மாணவர்கள் கழிப்பறைக்கு சென்று துண்டு காகிதங்களை தேர்வு எழுத எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தது. இதில் தனி மனித உரிமை மீறல் ஒன்றும் இல்லை. மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.