1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai petrol diesel price today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! – மாற்றமின்றி தொடரும் விலை!

Chennai
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. இது மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது.

அதன்படி பெட்ரோலுக்கு ரூ9.50-ம், டீசலுக்கு ரூ.7-ம் குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 22ம் தேதி பெட்ரோல் 8 ரூபாய் குறைந்து ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் ரூ.6 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனையாகி வந்தது.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து விலையில் மாற்றமின்றி அதே விலைக்கே பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்பிரிக்க கொரோனா? – நோயாளியை தேடும் அதிகாரிகள்!