திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (07:50 IST)

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ரூ.90ஐ நெருங்கியது!

இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக இருப்பதாகவும் குறிப்பாக மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் காரணமாக பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன 
 
பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி அவர்களும் இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் கிட்டத்தட்ட இருமடங்கு பெட்ரோல் விலை அதிகம் என்று விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 89.39 ரூபாய்க்கு விற்பனையாகிறது அதேபோல் டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் தற்போது கொஞ்சம் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்து பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது