செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (18:36 IST)

உலகில் விலை உயர்ந்த....தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரியாணி இதுதான்...

கோவையில் ஏழைகளுக்கு இலவசமாக பிரியாணி தந்து கொண்டிருக்கிறார் சப்ரினா என்ற பெண்.

இவரது கடையில் ஒரு பிளேட் பிரியாணி ரூ.20 என்றாலும்  இதைக் கொடுக்கமுடியாதவர்களிடம் ஏழைகளிடம் பசிக்கிறது என்றால் அவர்களிடம் பணம் வாங்காமல் இலவசமாகக் கொடுத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இவர்.

ஆனால் இதே உலகில்  ஒரு பிரியாணி உலகமே வாயைப் பிளக்க வைக்கும் அளவு விலை அதிகமாகவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தங்க இழைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பிரியாணியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த பிரியாணியின் விலை ஒரு பிளேட் ரூ.20,000க்கு விற்கப்படுகிறது .

இந்தியாவைச் சேந்த பம்பாய் ஆரோ நிறுவனம் துபாயில் உணவகம் துவங்கி 1 வருட நிறைவை முன்னிட்டு 23 கேரட்டால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பிரியாணி ரூ.3,97,087 க்கும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகைப்படமும் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.