செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (07:21 IST)

மீண்டும் விலையேறிய பெட்ரோல், டீசல், முடிவே இல்லையா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக விலை ஏறிக் கொண்டே இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி இருந்தது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து இன்றைய பெட்ரோல் விலை என்பது 89.13 காசுகளாக உள்ளது. அதேபோல் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து இன்றைய டீசல் விலை 82.04 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை வங்கதேசம் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாக விற்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் மத்திய மற்றும் மாநில அரசு விதிக்கும் அதிகபட்ச வரிகளால் பெட்ரோல் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்பதும் இது பொதுமக்கள் தலையில் சுமத்தப்படும் மிகப்பெரிய பாரமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராது என்று நினைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது