செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:32 IST)

ரூ.35,000-த்துக்கு குறைந்து வந்த தங்கத்தின் விலை!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 4 வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 4 வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. 
 
அதாவது கிராமுக்கு 32 குறைந்து ஒரு கிராம் ரூ.4,497க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.35,970-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.