செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (19:04 IST)

சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை நந்தனம் கல்லூரி இதுவரை ஆண்கள் மட்டும் பயிலும் கல்லூரியாக இருந்த நிலையில் தற்போது இருபாலர் கல்லூரி ஆக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் பெண்களுக்கான கல்லூரி மிகவும் குறைவு என்பதால் மாணவியர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருப்பதாகவும் எனவே சில ஆண்கள் கல்லூரியை இருபாலர் கல்லூரி ஆக மாற்ற வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை இழந்து வந்தது.

அந்த வகையில் தற்போது சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரி ஆக மாற்றி தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.

Edited by Mahendran