1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (16:34 IST)

தமிழ்நாடு குறித்து எனக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இதுவே -ஆனந்த் மகிந்திரா

anand Mahindra
சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில் நேற்று முதல் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெற்று வருகிறது.
 

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த மூலம் மின்துறையில் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இன்றைய இரண்டாம்  நாள்  நிகழ்வில், மகிந்திரா குழு நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் கல்வியை ஒரு புனிதமான தளமாகக் கருதி வழிபடப்படுகிறது. மும்பையில் இருந்து பள்ளிப்படிப்பிற்காக நான் தமிழ் நாட்டிற்கு வந்தபோது இதையே முதலில் தெரிந்து கொண்டேன்.

தமிழ்நாடு குறித்து எனக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இதுவே ஆகும்'' என்று தெரிவித்துள்ளார்.''