வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (09:31 IST)

சென்னையில் 7 மாதங்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து? – பயணிகள் அதிர்ச்சி!

Chennai MRTS
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையான மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த 7 மாதங்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் மக்களின் அன்றாட போக்குவரத்து சேவையில் மின்சார ரயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில் சேவை முக்கியமான பல பகுதிகள் வழியாக பயணிக்கிறது.

இந்த வழித்தடத்தில் நான்காவது ரயில் பாதை வேலை நடைபெற உள்ளதால் வரும் ஜூலை 1 தொடங்கி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாத காலத்திற்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு இணை நடவடிக்கையாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு வேறு வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Edit by Prasanth.K