வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (08:53 IST)

சதுரகிரிக்கு போக அனுமதி.. மழை வராம இருக்கணும்! – பதட்டத்தில் பக்தர்கள்!

sathuragiri
வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி தற்போது வைகாசி மாத பௌர்ணமியையொட்டி இன்று (ஜூன் 1) முதல் ஜூலை 4 வரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமட்தி அளித்துள்ளது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் அப்பகுதியில் உள்ள நீரோடைகளில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் மலைக்கோவிலில் தங்கவும் அனுமதி கிடையாது.

தற்போது அனுமதிக்கப்பட்ட இந்த 4 நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் மலையேற்ற அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. சமீபமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் அனுமதி ரத்து செய்யப்படலாம் என பக்தர்களிடையே பதட்டம் உள்ளது.

Edit by Prasanth.K