ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (07:54 IST)

சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு.. மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகை..!

சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும் சென்னை புறநகர் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள கள்ளிகுப்பம் என்ற பகுதியில் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு தொடர்ந்து வந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். 
 
இதனை அடுத்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதோடு திடீர் என சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய அலுவலர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்று கூறினார்
 
Edited by Siva