திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:35 IST)

சரவணபவன் உணவகத்திற்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும(CMDA) அதிகாரிகள்

சென்னை: சென்னை கே.கே நகரில் இயங்கிவரும் சரவணபவன் உணவகம் முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால் சி.எம்.டி.ஏ(CMDA) அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 
சென்னை கே.கே நகர் அசோக் பில்லர் சாலையில் இயங்கி வந்த சரவணபவன் உணவகத்தை இன்று காலை, சென்னை சி.எம்.டி.ஏ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கட்டிட உரிமையாளர்  மாநகராட்சியில் இருந்து முறையான அனுமதி பெறாமல்  இரண்டாவது தளத்தை கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். விதிமீறலின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் ராயப்பேட்டையில் உள்ள சரவணபவன் உணவகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.