திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (22:32 IST)

கொளத்தூர் நகை கடை கொள்ளை: முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் கைது

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை ராஜஸ்தான் போலீசார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

தினேஷ் சவுத்ரி என்ற் கைது செய்யப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் என்றும், இவர் மற்றொரு கொள்ளையன் நாதுராமின் கூட்டளி என்றும் கூறப்படுகிறது

ராஜஸ்தான் கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தினேஷ் சவுத்ரியிடம் போலீசார் விசாரணை செய்தபோது சென்னை கொள்ளையிலும் அவன் சம்பந்தப்பட்டது தற்செயலாக தெரியவந்ததாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். தினேஷூக்கும் பெரியபாண்டியன் கொலைக்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.