ஒருபக்கம் பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், இன்னொரு பக்கம் பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்
நடிகை ஆண்ட்ரியா நடித்த சமீபத்திய படங்களான அவள், தரமணி போன்ற படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரை மார்க்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்று கூறப்படுகிறது.
ஒருபக்கம் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தில் ஆர்மி கேர்ளாக குதிரை சவாரி செய்யும் ஆண்ட்ரியா, இன்னொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் 'வடசென்னை' படத்தில் பாமர கிராமத்து பெண் சந்திரா என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம்.
ஒருபக்கம் பவர்ஃபுல் கேர்ள், இன்னொரு பக்கம் பாமரம் கேர்ள் என நடித்து வரும் தனக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளதாக இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.