நிலவுல தண்ணி இருந்தா சொல்லு... சென்னை மெட்ரோ வாட்டர் லொல்லு!!

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (10:29 IST)
நிலவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்கு சொல்லுங்கள் என சந்திரயான் 2-வை அனுப்பிய இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டரில் தகவல் கொடுத்துள்ளது. 
 
சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் நேற்று 2.43 மணிக்கு செலுத்தப்பட்டது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய ரூ.978 கோடி செலவில் சந்திரயான் உருவாக்கப்பட்டது. 
 
சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பல தரப்பினர் இஸ்ரோவை புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. 
அந்த பதிவில், இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நாங்கள் புதிய நீர்நிலைகளை அதிகரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம். ஒருவேளை நிலைவில் நீங்கள் தண்ணீரை கண்டுப்பிடித்தால் முதலில் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரியும்தானே? என கிண்டலாக பதிவிட்டுள்ளது. 
 
மெட்ரோவின் இந்த பதிவுக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. தண்ணீருக்கு வழியில்லனாமும் இந்த லொல்லுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என சென்னவாசிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :