வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 மே 2023 (11:13 IST)

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு என போலி அறிவிப்பு: நிர்வாகம் எச்சரிக்கை..!

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு என போலியாக இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளில் அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றது என்றும் அவைகளை நம்ப வேண்டாம் என்றும் மற்றொரு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி போலியான இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான செய்திகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளை மட்டும் பார்க்கவும் என்றும் வேறு எந்த ஒரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெளிவரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது போன்ற தவறான செய்திகளை பரப்பி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran