1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (13:04 IST)

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்காவில் சுரங்கப் பணி தொடங்குவது எப்போது?

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி மூன்றாவது வாரம் முதல் பனகல் பார்க் பகுதியில் சுரங்கம் தோன்றும் பணி தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கபாதையாகவும் அதன் பின் உயர்மட்ட பாதையாகவும் இந்த ரயில் பாதை அமைய உள்ளது. 

 
9 சுரங்க ரயில் நிலையங்கள் 18 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் உருவாக இருக்கும் இந்த திட்டத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் பனகல் பார்க் பகுதியில் ஜனவரி 3வது வாரம் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் என்றும் இந்த பணிக்காக சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran