வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:34 IST)

2023ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் செய்த சாதனை.. எத்தனை கோடி பயணிகள்?

சென்னையின் வரப்பிரசாதமாக விளங்கும் வசதிகளில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆறு கோடி பேர் பயணம் செய்த நிலையில் 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் மூன்று கோடி பேர் அதிகம் பயணம் செய்து உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக 2023 ஆம் ஆண்டில் தான் அதிக பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்றும் 2023 ஆம் ஆண்டில் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளனர் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக சென்னை மெட்ரோ ரயிலில் 3 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran