சென்னையில் மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்!

metro
சென்னையில் மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்!
siva| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:17 IST)
சென்னை சென்னை மெட்ரோ ரயில்கள் இதுவரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்துள்ளது
சென்னையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பெரும்பாலான பயணிகள் இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதால் நல்ல லாபத்துடன் மெட்ரோ இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சாலை வழியே பயணம் செய்வதை விட மெட்ரோ ரயிலில் செல்வதால் நேரமும் குறைவு மற்றும் கட்டணமும் குறைவு என்பதால் பல பயணிகள் தற்போது மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் இனி 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த நேரத்திற்குள் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :