செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:36 IST)

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என திமுகவினர் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் திமுகவினர் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் திமுகவினரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் 
 
சென்னை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டும் விவகாரம் குறித்த இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் திமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது