வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (18:08 IST)

நீண்ட நாட்களாக எடுக்கப்படாத வாகனங்கள்: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு

metro
சென்னை மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ நீண்ட நாட்களாக வாகனங்களை எடுக்காத உரிமையாளர்கள்‌ உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துச்‌ செல்லலாம்‌ என சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகனம்‌ நிறுத்தும்‌ இடத்தில்‌ நீண்ட நாட்களாக மெட்ரோ பயணிகள்‌ தங்களது வாகனங்களை எடுக்காமல்‌ உள்ளார்கள்‌. இதில்‌ இருசக்கரம்‌, மூன்று சக்கர மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்‌ மெட்ரோ பயணிகள்‌ தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துச்‌ செல்ல ஒரு வாய்ப்பு அளிக்கிறது 
 
சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவன கட்டுப்பாட்டில்‌ 41 மெட்ரோ இரயில்‌ நிலையங்கள்‌ உள்ளது. இந்த நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்தும்‌ இடத்தில்‌ கடந்த 2020-ம்‌ ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில்‌ இருந்து இது நாள்‌ வரை தோராயமாக 120 அனைத்து வகை வாகனங்களும்‌ எடுத்துச்‌ செல்லாமல்‌ அதன்‌ உரிமையாளர்கள்‌ பல்வேறு காரணத்தால்‌ விட்டு சென்றார்கள்‌. அவர்களது வாகனங்களை எடுத்துச்‌ செல்ல வாகனத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தி வாகன உரிமையாளர்கள்‌ தங்களது வாகனங்களை எடுத்துச்‌ செல்லலாம்‌. அவ்வாறு எடுத்துச்‌ செல்லாத வாகனங்கள்‌ அந்தந்த பகுதியில்‌ உள்ள காவல்துறை அலுவலகத்தில்‌ ஒப்படைக்கப்படும்‌. எனவே வாகன உரிமையாளர்கள்‌ தங்களது வாகனங்களை பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம் 
ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள்‌ தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று (28.09.2022) முதல்‌ 28,10.2022-ம்‌ தேதிக்குள்‌ எடுத்து செல்லலாம்‌. இந்த வாய்ப்பை தவறவிட்டால்‌ வாகனங்கள்‌ அந்தந்த பகுதியில்‌ உள்ள காவல்‌ நிலையத்தில்‌ ஒப்படைக்கப்படும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.