1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological yellow alert to 11 districts

11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

rain
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை குறித்த மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து வருவதை அடுத்து 11 மாவட்டங்களில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட 11 மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
43 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து -11 பேர் காயம்