ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (17:56 IST)

கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு..! 300க்கும் மேற்பட்டோர் பலி..!! துயரத்தில் காங்கோ மக்கள்..!!!

flood
காங்கோ நாட்டில் பெய்த அதி  கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கங்கோ கின்ஷாசாவில் பெய்த அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 
 
பெருவெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், சுமார் 43,750 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
கிழக்கு காங்கோவில் பெருவெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. தெற்கு கிவு மாகாணத்தின் கலேஹே பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பலரது சடலங்கள் கிவு ஏரியில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதனிடையே உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 394 என கூறப்படுகிறது. ஆனால் தேடுதல் தொடர்வதால் இது தற்காலிக எண்ணிக்கை மட்டுமே எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.