1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2024 (07:41 IST)

யாருக்கும் விடுப்பு இல்லை, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.போக்குவரத்து துறை அறிவிப்பு..!

transport
யாருக்கும் விடுப்பு இல்லை எனவும், ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்,.
 
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும்,  போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 9ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edied by Siva